
இலங்கை ரூபாவுக்கு எதிராக நேற்றையதினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322 ரூபாயை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை 321.87 ரூபாயாக இருந்த ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று 322.27 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேபோல், வெள்ளிக்கிழமை 314.03 ரூபாவாக இருந்த ஒரு அமெரிக்க டொலரின் வாங்கும் விலை, நேற்று 314.57 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஏப்ரல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 1.8 சதவீதம் சரிந்துள்ளது.




