
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி, சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள வயல் நிலமொன்றில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
குறித்த நபர் கடந்த 08 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தவர் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சின்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் வெளியாகத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




