இலங்கையில் TIN எண் பெறுவோருக்கு அவசர எச்சரிக்கை!!

305

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN – Taxpayer Identification Number) பெறுவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி தவறான தகவல்களை சமர்ப்பித்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றுவரை, வரி செலுத்துவோர் அடையாள எண்ணுக்காகப் பதிவுசெய்த நபர்களின் எண்ணிக்கை 13 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தெரியவருகிறது.

வரி செலுத்துவோர் அடையாள எண் என்பது இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (Inland Revenue Department – IRD) வழங்கும் தனித்துவமான அடையாள எண்ணாகும்.

வரி தொடர்பான செயல்பாடுகள், வருமான வரி தாக்கல், வேலைவாய்ப்பு, வங்கி பரிவர்த்தனைகள், இறக்குமதி/ஏற்றுமதி போன்றவற்றுக்கு இது கட்டாயமாகத் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.