
இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அடுத்த வாரத்திற்குள் உரிய விலையில் சந்தைக்கு வெளியிடப்படும் என்று அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் உள்ள எந்தவொரு இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பைக்கட்டின் விலை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும், டொலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், எதிர்காலத்தில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய விலை திருத்தத்தின்படி, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது விலை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




