காதலனை கத்தியால் வெட்டிய காதலி!!

471

knife-blood

காலி கோட்டை பிரதேசத்தில் தற்காலிக தங்குமிடம் ஒன்றில் காதல் ஜோடிக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில், காதலன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அம்பாலங்கொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞரும் ஹெலஹெர பிரதேசத்தை சேர்ந்த யுவதியும் விடுதியில் பணத்தை செலுத்தி இரவு அங்கு தங்கியிருந்தனர்.

விடுதியில் தங்கியிருந்த இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் யுவதியை இளைஞன் கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார்.



அப்போது இளைஞன் கையில் இருந்து கத்தியை பிடிங்கிய யுவதி, அவரைத் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த இளைஞன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.