பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொதியினுள் கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு சடலம்!!

296

மஹியங்கனை நகரில் உள்ள கால்வாயொன்றில் பொதிசெய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டிருந்த மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை நடைபெற்றுள்ளது.

மஹியங்கனை நகரில் உள்ள கால்வாயொன்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடொன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று வீசப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளதுடன்,பொதியினுள் மனித சடலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், கண்டெடுக்கப்பட்ட சடலம் மஹியங்கனை மருத்துவமனை பிரேத அறையில் மேலதிக பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.