வங்கியில் இருந்து பல மில்லியன் பணம் மாயம் : பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி!!

17

களுத்துறையில் வங்கிக் கணக்கிலுள்ள பணம் கறுப்பு பணம் எனக் கூறி அச்சுறுத்தி 23 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த இரண்டு நபர்களை களுத்துறை கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஹபுத்தளையை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும், மொரட்டுவையை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை, கட்டுக்குருந்த பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிான நீண்ட விசாரணையின் பின்னரே இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வயோதிப பெண்ணுக்குத் தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி, அவரை அச்சுறுத்தி முதலில் அவரது வங்கிக் கணக்கு விபரங்களை பெற்றுள்ளனர்.

பின்னர், அந்த வங்கிக் கணக்கில் உள்ள பணம் கறுப்பு பணம் எனக் கூறியுள்ளனர். அதனைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி, 23 லட்ச ரூபாய் பணத்தை தங்களது வங்கிக் கணக்கொன்றுக்கு வைப்புச் செய்ய வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மற்றும் பணப் பரிவர்த்தனை குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என அந்தப் பெண்ணை சந்தேகநபர்கள் மிரட்டியுள்ளனர்.

பரிசோதனைக்குக்குப் பின்னர் அவை கறுப்பு பணம் இல்லை என்பது உறுதியானால் மீண்டும் அவரது கணக்கிற்கே பணம் திருப்பி அனுப்பப்படும் எனக் கூறி ஏமாற்றியுள்ளனர்.

எனினும் வாக்குறுதி அளித்ததற்கமைய, பணம் மீண்டும் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வயோதிப பெண் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.