வீராட்கோலி கேப்டனாக நீடிப்பார்?

431

virat

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் 3 நாடுகள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப்போட்டிக்கு பிறகு இந்திய அணி சிம்பாப்வே சென்று 5ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 24-ந் திகதி முதல் ஆகஸ்ட்3-ந் திகதி வரை நடக்கிறது.

முதல் போட்டி 24-ந் திகதியும், 2-வது ஒருநாள் போட்டி 26-ந் திகதியும், 3-வது ஆட்டம் 28-ந் திகதியும் ஹராரேயில் நடக்கிறது. 4-வது போட்டி 31-ந் திகதியும், 5-வது மற்றும் கடைசி ஆட்டம் ஆகஸ்ட் 3-ந் திகதியும் புலவாயோவில் நடக்கிறது.

சிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. சந்தீப் பட்டில் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி வீரர்களை தேர்வு செய்கின்றனர். காயம் அடைந்த டோனி அதில் இருந்து குணமடைந்து விட்டாரா என்பது தெரியவில்லை. அவர் உடல் தகுதியுடன் இல்லையென்றால் கோலியே கேப்டனாக நீடிக்கப்படுவார். கோலி தலைமையில் இந்திய அணி 2 ஆட்டத்திலும் தோற்றாலும் அவரே கேப்டனாக நீடிக்கப்படலாம்.

சிம்பாப்வே தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்க முதலில் திட்டமிட்டதாக தெரிகிறது. அந்த முடிவை தற்போது தேர்வு குழுவினர் கைவிட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் ரெய்னா அல்லது ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம். இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. மேற்கிந்திய தீவுகளில் விளையாடும் வீரர்களே இடம் பெற வாய்ப்பு உள்ளது.