ஒரே நாளில் பாரியளவு குறைந்த தங்கத்தின் விலை!!

106

இலங்கையில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை இன்றைய தினம் (11.06.2026) 340,400 ரூபா பதிவாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 8000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 370,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.