சிறுமியை விழுங்கிய சலவை இயந்திரம்!!

385

அமெரிக்காவில் 10 வயது சிறுமி ஒருவர் சலவை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள லோங் தீவைச் சேர்ந்த டெஜானா (10) என்ற சிறுமி, சலவை இயந்திரத்தில் இருந்து துணி எடுப்பதற்காக தனது தாய் டையானாவிற்கு (Diana) உதவியுள்ளார்.

அப்போது அவர் எதிர்பாரதவிதமாக இயந்திரத்தினுள் விழுந்ததால், அதிர்ச்சியடைந்த தாய் அவரை மீட்க முயன்றுள்ளார். ஆனால் பல முறை முயன்ற பிறகும் சிறுமியை மீட்க முடியாததால், அவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சுமார் ஒரு மணி நேரம் போராடி இயந்திரத்தை தனியாக பிரித்து சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறுமி டெஜானா கூறுகையில், இயந்திரத்தின் உள்ளே விழுந்த போது பயம் என்னை சூழ்ந்துகொண்டது என்றும் இப்போது மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் இனி ஒருபோதும் எனது தாய்க்கு சலவை செய்ய உதவமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

30 31 32