
கால்பந்து உலகக் கோப்பையின் போது நிகழவிருக்கும் ‘பெரும் அழிவு’ குறித்த பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா கூறியதாகக் கூறப்படும், ‘உலகளாவிய விளையாட்டுப் போட்டியின் போது வேற்றுக்கிரகவாசிகள் படையெடுப்பார்கள்’ என்ற தீர்க்கதரிசனம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தன்னை ஒரு ஆன்மீக ஆலோசகராக அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘வோ பஹியானா’ (Vó Bahiana) என்ற பிரேசிலியப் பெண்மணி,
ஜூன் 24 அன்று புளோரிடாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வேற்றுக்கிரகவாசிகள் திடீரென நுழைந்து, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கடத்திச் செல்வார்கள் என்று கூறுகிறார்.
மியாமி நகரில் பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இந்தப் போட்டியின் போது,
நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஆயிரக்கணக்கான மக்கள் வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
சமூக ஊடகங்களில் 23 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட பஹியானா, இந்த மாதம் இருமுறை இது குறித்துக் கனவு கண்டதாகக் கூறுகிறார்.
மியாமி மைதானத்திற்குப் பல வேற்றுக்கிரக விண்கலங்கள் வருவதையும், அவற்றில் உள்ள பிரம்மாண்டமான ‘தாய் விண்கலம்’ (mothership) இயந்திரக் கைகள் போன்ற பெரிய சாதனங்களைப் பயன்படுத்தி மக்களைக் கடத்திச் செல்வதையும் தான் கண்டதாக அவர் வீடியோ ஒன்றில் கண்ணீருடன் தெரிவித்தார்.

வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கடும் அச்சத்தில் அலறுவதைத் தெளிவாகக் கண்டதாகவும் அவர் கூறினார். மேலும் இதை விளக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
அவரது கூற்றுப்படி, அந்த முக்கிய விண்கலத்தைத் தவிர, பூமியில் மனிதர்களிடையே வாழ்வதாகச் சதிக்கோட்பாட்டாளர்களால் நம்பப்படும் ‘ரெப்டிலியன்ஸ்’ (Reptilians – ஊர்வன போன்ற தோற்றம் கொண்ட வேற்றுக்கிரகவாசிகள்) குழுவைக் கொண்ட இரண்டாவது விண்கலமும் அன்று வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த மர்மமான தீர்க்கதரிசனத்தின் காரணமாக, பெரும்பாலான சமூக ஊடகப் பயனர்கள் அவரைக்கடுமையாகக் கேலி செய்வதோடு விமர்சனங்களுக்கும் உள்ளாக்கியுள்ளனர்.
இத்தகைய விமர்சனங்கள் இருந்தபோதிலும், பிரேசிலில் அவர் கணிசமான பிரபலத்தைப் பெற்றுள்ளார்; ஏனெனில் அவரது முந்தைய தீர்க்கதரிசனங்களில் சில உண்மையாகியதாகக் கூறப்படுகிறது.
பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் (Rio Grande do Sul) மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் கிறிஸ்டியன் (Christian), ஜோவா கார்னீரோ (João Carneiro) போன்ற பிரபல இசைக்கலைஞர்களின் திடீர் மரணங்கள் குறித்தும் அவர் முன்பே பேசியிருந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இத்தகைய வேற்றுகிரகவாசிகளின் படையெடுப்பு சாத்தியம் குறித்து, அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) ஆகியவை,
அத்தகைய நிகழ்வு குறித்த எந்த ஆதாரமும் அல்லது தகவலும் தங்களிடம் இல்லை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றன.




