17 கோடியில் திருமண ஏற்பாடு : வருங்கால கணவனை கொலை செய்த இளம்பெண்!!

27

வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தில் தள்ளி இளம்பெண் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம், ககுஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான கேத்தன் அகர்வால்(Keten Agarwal).

இவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராக இருந்துள்ளார். இவருக்கு சியா கோயல்(Siya Goyal) (20) என்ற பெண்​ணுடன் திரு​மணம் நிச்சயிக்​கப்​பட்டு, வரும் நவம்பர் மாதம் இவர்களின் திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது.

இவர்களின் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.17 கோடி மதிப்பில் அரண்மனை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், விருந்தினர்களை அழைத்து வர 2 தனியார் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 18 ஆம் திகதி லோனாவாலா அருகே உள்ள லோகாகட் கோட்டைக்கு தனது வருங்கால மனைவி சியா கோயலின் பிறந்தநாளன்று அவருடன் மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதில் கேத்தன் அகர்வால், கால்தவறி .400 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளதாக அவரது வருங்கால மனைவி சியா கோயல் தெரிவித்துள்ளார்.

மேலும், என் பிறந்தநாளன்றே நீ என்னை விட்டுப் போய்விட்டாய் என்பது போல் கேத்தன் அகர்வாலின் மரணம் குறித்து சியா கோயல் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டுள்ளார்.

ஆனால், கேத்தன் அகர்வால் மலையேற்றத்தில் அனுபவம் உள்ளவர் என்பதால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, சியா கோயலிடம் நடத்திய தீவிர விசாரணையில் சியா கோயல் தனது காதலனுடன் சேர்ந்து கேத்தன் அகர்வாலை மலையில் இருந்து தள்ளி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

சியா கோயல், புனேவின் கோந்த்வா பகுதியைச் சேர்ந்த சேத்தன் சௌத்ரி(Chetan Chaudhry) (22) என்பவருடன் காதலில் இருந்து வந்துள்ளார்.

கேத்தன் அகர்வாலை அவருக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக திருமணத்திற்கு முந்தையை வீடியோ எடுக்க பாலி தீவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த போது, செல்லும் வழியிலே தனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக சியா கோயல் கூறியதால் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் விசாரணையில் அவர் வேண்டுமென்றே பாஸ்போர்ட்டை கிழித்து விட்டு நடகமாடியது தெரிய வந்தது.

கடந்த மே 31ஆம் திகதி கேதன் அகர்வாலை ஷியா லோஹாகட் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்துள்ளார் சியா கோயல். ஆனால் அவர் புதரை பிடித்துக்கொண்டு தப்பிவிட்டார்.

உடனே நிலைமையை சமாளிக்க ஷியா பாம்பு, பாம்பு என்று கத்தி, பாம்பிடமிருந்து காப்பாற்றுவதற்காக தள்ளிவிட்டதாகவும் கூறி தப்பித்துக்கொண்டார். கேதனுக்கும் தனது வருங்கால மனைவி மீது சந்தேகம் வரவில்லை.

மீண்டும் ஜூன் 4 ஆம் திகதி மீண்டும் கேதனை ஷியா லோஹாகட் கோட்டைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கேதனை அவரது தாயார் அனுப்பாததால் அப்போது உயிர் தப்பியுள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் ஜூன் 14 ஆம் திகதி மீண்டும் கேதனை ஷியா லோஹாகட் கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். அன்று கோட்டையை பார்க்க அதிக கூட்டம் வந்திருந்ததால், அன்றைய தினமும் அவரது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

கடைசியாக தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என கட்டாயப்படுத்தி, லோஹாகட் கோட்டைக்கு அழைத்துள்ளார்.

பிறந்தநாளை தனியார் ரிசார்ட்டில் கொண்டாடலாம் என கேதன் தெரிவித்த நிலையில், அவரது பெற்றோரிடமும் கோரிக்கை வைத்து லோஹாகட் கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் தனது காதலன் சேத்தன் சௌத்ரியை அங்கு வரவழைத்து இருவரும் கேதன் அகர்வாலை பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.