யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி!!

118

யாழ்ப்பாணம் இளவாலை மாதகல் பகுதியில், இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர் நல்லையான் வீதி, சில்லாலையை சேர்ந்த 80 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனம், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது

இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.