முகநூல் முழுவதும் முட்டாள்கள் : தயாசிறி ஜயசேகர கடும் விமர்சனம்!!

92

முகநூல் முழுவதும் முட்டாள்கள் நிறைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

முகநூல் ‘முட்டாள்களால் நிரம்பி வழிகிறது’ என்றும், ‘அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடும் இடம் அல்ல’ என்றும் நம்புவதால், அதைத் தாம் பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார். ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கூறுகையில், அர்த்தமுள்ள விவாதங்களுக்கான ஒரு களமாக முகநூலைக் கருதாததால், அந்த சமூக ஊடகத் தளத்தைத் தவிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘நான் முகநூலுக்குச் செல்வதில்லை, ஏனெனில் அது முட்டாள்கள் நிறைந்தது. அது அறிவாளிகள் வாதிடக்கூய ஒரு களம் அல்ல. அதனால்தான் நான் அங்கு செல்வதில்லை, அதைப் பார்ப்பதும் இல்லை’ என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைக் குற்றவாளிகள், இனவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களின் நற்பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியே தயாசிறி ஜயசேகர இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது இதுபோன்ற முத்திரைகள் குத்தப்பட்டால், தங்கள் மீதான களங்கத்தைத் துடைத்து , அரசியல் பணிகளைத் தொடர்வது கடினமாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.