தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

26

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (10.07.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (09.07.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபா அதிகரித்து 378,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 378,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,475 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.