
உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான பின்லேடனின் மருமகன் சுலைமான் அபு காய்த்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செம்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத் தாக்குதலில் ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்து நொறுங்கியது.
இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அல்கொய்தா அமைப்பை சேர்ந்த பின்லேடனின் மருமகனான சுலைமான் அபு கய்த் என்பவனை அமெரிக்க உளவுத்துறையினர் கைது செய்தனர்.
பின்லேடனின் இளைய மகள் பாத்திமாவை திருமணம் செய்துள்ள இவன், கைது செய்யப்படுவதற்கு முன்னர் வரை பின்லேடனின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இதுகுறித்து இவர் மீது தொடரப்பட்ட வழக்கு, நேற்று மண்ஹாட்டன் நீதிமன்ற வீசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, சுலைமான் அபு காய்த்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.
மேலும் அபு காய்த்துக்கு அமெரிக்காவிலும், உலகின் இதர பகுதிகளிலும் உள்ள சொத்துகளை சொந்தம் கொண்டாடும் உரிமையும் பறிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.





