பிரபல நடிகரின் கட்அவுட்டை திருமணம் செய்த வினோதப் பெண்!!

672

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஹொலிவுட் நடிகர் ரொபட் பான்டிசனின் கட்அவுட்டை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் (Las vegas) மாகாணத்தில் வசிக்கும் லாரன் ஆட்கின்ஸ் (25) என்ற பெண், டுவைலைட் (Twilight) என்ற ஹொலிவுட் திரைப்படத்தில் ரத்தக்காட்டேரியாக நடித்த நடிகர் ரொபட் பான்டிசனின் (Robert Pattinson) தீவிர ரசிகை.

நாளடைவில் ரொபட் மீதான மோகம் இவருக்கு அதிகரிக்கவே, ராபர்ட்டின் நிஜ உயரத்துக்கு காட்போர்டில் கட்அவுட் ஒன்றை செய்து, அதனுடன் சமீபத்தில் திருமணமும் செய்துகொண்டார்.

இதுகுறித்து இவர் கூறுகையில், எத்தனையோ மாப்பிள்ளைகள் என்னை திருமணம் செய்துகொள்ள வந்தார்கள். ஆனால் ஒருவரைக் கூட எனக்கு பிடிக்கவில்லை.

எனவே எனக்குப் பிடித்த ரொபட்டை திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்த நான், அதை தற்போது செயல்படுத்தியுள்ளேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் நான் நினைத்ததைச் சாதித்துவிட்டேன் என தனக்குத்தானே புகழ் மகுடம் சூட்டிக்கொள்கிறார் இந்த விசித்திர பெண்.

30 31 32