45 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேருந்து!!

103

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. புத்தல – மஹகொடய பகுதியில் இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பேருந்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற விதம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.