பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் எச்சரிக்கை!!

113

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும்,

சிலாவிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடல் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையினர் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று (11.08.2026) மதியம் 12 மணியளவில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை மதியம் 12 மணி வரை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.