தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி : பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!!

110

கண்டி – வத்தேகம நகரில், சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் அவரது தாய் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் அழைத்து செல்லப்பட்டு நடுவீதியில் விட்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமியின் தாயையும் அவரது காதலர் என அடையாளம் காணப்பட்ட நபரையும் இன்று (14.08.2026) கைது செய்துள்ளனர்.

ஹாலிஎல – கெடவல வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹாலிஎல பொலிஸாரினால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் ஹாலிஎல பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.