யாழில் பலரின் கண்ணுக்கு பிரச்சனையான மின் விளக்குகள் பறிமுதல்!!

276

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண் பாதிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக, ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா?

அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதி

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்டத் தகவல்களின்படி, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலையை நாடலாம் எனவும், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆலயத் திருவிழாவின்போது மின் இணைப்புகளை வழங்கியவர்கள் இளவாலைப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.