வவுனியாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு சுற்றுலா சென்ற சிறுமி பரிதாபமாக பலியான சோகம்!!

43

கம்பளை, புப்புரெஸ்ஸ – டெல்டாவத்தை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற மூன்று வயது சிறுமி உயிரழந்துள்ளார். தண்ணீர் என நினைத்து வீட்டில் இருந்த பசுப்பால் பதப்படுத்தப் பயன்படும் இரசாயன திரவத்தை பருகியதால் சிறுமி உயிரிழந்துள்ளார்.

கம்பளை, வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வவுனியா, செட்டிக்குளம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட தினேஷ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட பலர் டெல்டாவத்தையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

வவுனியாவிலிருந்து சென்ற குழுவினர் நேற்று பகல் குளித்துவிட்டு, மாலையில் வீட்டின் வெளிப்பகுதியில் நின்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளனர்.

இதன் போதே இந்தச் சிறுமி வீட்டுக்குள் சென்று ஜன்னல் மீது வைக்கப்பட்டிருந்த குறித்த திரவத்தை குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.