நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை உயர்வு!!

165

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை நேற்று (20.10.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 13 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  சந்தையில் நிலவும் நிலவரம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து இன்று (21.10) நள்ளிரவு முதல் பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.