இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் மாற்றம்!!

172

இன்று (21.10.2026) நள்ளிரவு முதல் பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று(20) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 13 ரூபாவினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் தீர்மானித்திருந்தனர்.

கோதுமை மாவு விலை உயர்வைக் கருத்தில் கொண்டு சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.