
வீடு கட்டிக் கொடுப்பதாகக் கூறி 38.7 மில்லியன் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடு கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்காமல், பொதுமக்களிடமிருந்து 38.7 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தங்களை ஒரு நிறுவனத்தின் இயக்குநர்களாகக் காட்டிக்கொண்டு, வீடு கட்டிக் கொடுப்பதாகக் கூறி மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளதாகவும், ஆனால் கட்டுமானப் பணிகளை ஒரு பகுதி மட்டுமே செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோசடிச் செயலின் மூலம் சந்தேக நபர்கள் மொத்தம் 38,770,000 ரூபாயைப் பெற்றுள்ளதாகவும், இது நம்பிக்கையை மீறிய குற்றச் செயல் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, புகோடாவைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவரும், தொம்பேயைச் சேர்ந்த 19 வயதுடைய பெண் ஒருவரும் செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





