8 வயதில் சினிமா இயக்குனரான சிறுவன்!!

641

நேபாள நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன், உலகின் இளம் வயது திரைப்பட இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளான்.

நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் வசிக்கும் சவுகத் பிஸ்தா (8) என்ற சிறுவன் அங்குள்ள பாடசாலை ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் இவன் இயக்கிய லவ் யூ பாபா (Love you Baba) என்ற திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2006ம் ஆண்டில் இளம் வயது திரைப்பட இயக்குநர் என சாதனை படைத்த இந்தியாவின் கிஷன் ஸ்ரீகாந்த் (Kishan Srikanth) என்ற 9 வயது சிறுவனின் சாதனையை தற்போது சவுகத் பிஸ்தா முறியடித்துள்ளான்.

இதன் மூலம் சவுகத் பிஸ்தா கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

B b1