நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!!

114

இன்று (30.10.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 5 ரூபாயினால் அதிகரிக்கப்படுவதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.