
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட பெருக்கெடுப்பால் வடக்கு ரயில் மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு காரணமாக குருநாகலைக்கும் மஹவைக்கும் இடையிலான பகுதியில் தொடருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து வரும் தொடருந்துகள் குருநாககலை வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தொடருந்துகள் மஹவை சந்தி வரையிலும் மட்டுமே இயக்கப்படும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று (02.11.2026) பெய்த மழையின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு மதகுகள் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





