நண்பர்களுடன் நீராட சென்ற புது மாப்பிள்ளை உயிரிழந்த சோகம்!!

84

மாத்தறை, தெனியாயாய பிரதேசத்தில் நீரூற்றுப் பகுதியில் நீராடச் சென்றபோது, நீரில் அடித்து செல்லப்பட்டு 17 நாட்களுக்கு முன் திருமணம் ஆன புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று, கொழும்பின் முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் கணினிப் பொறியியலாளராக பணியாற்றிய 34 வயது பிஷான் பிரபாத்வர (Pishan Prabathwara) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த மாதம் 21ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் நண்பர்களுடன் நீராட சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

7 பேர் கொண்ட குழுவினர் நுகேகொட பிரதேசத்திலிருந்து தெனியாய, பெவரலிய பிரதேசத்திற்குச் சுற்றுலாப்பயணம் சென்றுள்ளனர். அங்குள்ள நீரூற்றுப் பகுதியில் நீராடச் சென்றபோது, திடீர் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளார்.

பிஷான் பிரபாத்வர (Pishan Prabathwara) உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். ஏனைய இருவர் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் காயங்களுடன் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் காணாமல் போன நால்வரும் நேற்று மாலை சடலங்களாக மீட்க்கப்பட்டனர்.