கிணற்றில் தவறி விழுந்து இளம் குடும்பப் பெண் பரிதாபமாக பலி!!

22

குருநாகல் – கல்கமுவை பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று(08.11.2026)பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்கமுவை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. வீட்டுத் தேவைகளுக்காக நீரினைப் பெற்றுக்கொள்ளக் கிணற்றுக்குச் சென்றபோதே, எதிர்பாராத விதமாக இவர் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

அவர் உடனடியாகக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்கமுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.