
யாழ்ப்பாணம், பிரவுன் வீதிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், முச்சக்கர வண்டியைச் செலுத்திய வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் அதிவேகமாகப் பயணித்தமையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





