
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சந்தையில் முட்டைகளின் விலை அதிகரித்துள்ளது. தற்போது சந்தையில் முட்டைகள் ரூ. 42 முதல் 45 வரையிலான விலையில் விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரிசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முட்டை உற்பத்திச்செலவு அதிகரிப்பு மற்றும் தேவை அதிகரிப்பு ஆகியவையே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறியுள்ளார். “கனமழையின் காரணமாக காலநிலை மாறியுள்ளது.
சுமார் 80% ஆக இருந்த கால்நடை உற்பத்தி, 50% – 60% ஆகக் குறைந்துள்ளது. மேலும், கால்நடை உற்பத்திக்குத் தேவையான மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களின் விலை சமீபத்தில் அதிகரித்து உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.
ஆகையால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பேக்கரிப் பொருட்களின் பணிகள் தொடங்கியுள்ளன. அதனால், பேக்கரிகளும் அதிக முட்டைகளை வாங்குகின்றன. இதனால் தான் முட்டை விலைகள் அதிகரித்துள்ளன.
இது செயற்கையான விலை உயர்வு அல்ல, மாறாக தேவை மற்றும் அளிப்பின் காரணமாக ஏற்படும் விலை உயர்வாகும். முட்டையின் விலையேற்றம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.





