நண்பன் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண்ணும் உயிரிழந்த சோகம்!!

13

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே உள்ள மாமலக்கண்டம் பகுதியில், நண்பர் உயிரிழந்த துயரத்தில் இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே உள்ள மாமலக்கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் வாசு (20). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அம்ரிதா (19) என்ற இளம்பெண்ணுக்கும் இடையே நட்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த நவம்பர் 24-ம் தேதி விஜய் வாசு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விஜய்யின் திடீர் மறைவால் அம்ரிதா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகித் துயரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், அடுத்த நாளான நவம்பர் 25-ஆம் தேதி அம்ரிதாவும் உயிரிழந்தார்.

நண்பர் உயிரிழந்த அதிர்ச்சி மற்றும் மனவேதனையில் அம்ரிதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் மாமலக்கண்டம் கிராம மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.