10,000 மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பால் பூமிக்கு ஆபத்தா?

569

Sun

சூரியனில் இதுவரையிலும் இல்லாத அளவு 10,000 மடங்கு சக்தி மிகுந்த சூரிய வெடிப்பினை நாசா விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர்.

இந்த சூரிய வெடிப்பு, சூரியனின் மையப்பகுதியினை விட 12 மடங்கு வெப்பம் நிறைந்தது, இதற்கு SUPER FLARE என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பு, அருகிலுள்ள நட்சத்திரத்தில் இருந்து 60 ஒளியாண்டுகள் தொலை தூரத்திலிருந்து வந்திருக்க கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இவ்வகை சூரிய வெடிப்புகள் பூமியில் மின்சாரத்தையும், தகவல் தொடர்பையும் துண்டிக்ககூடிய அபாயம் உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் ஏழுமுறை இவ்வாறான சூரிய வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதேபோன்றதொரு சூரிய வெடிப்பு 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.