பெண்கள் உட்பட 9 பேரின் தலையை துண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளைப் பிடித்துக்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அப்பகுதிக்கு ஐ.எஸ். (இஸ்லாமிக் மாநிலம்) என்று பெயர் வைத்து அழைத்து வருகிறன்றனர்.
மேலும், அங்குள்ள குர்திஷ் மக்கள் வாழ்ந்து வரும் பகுதிகளை கைப்பற்றி அவர்களை மதம் மாற்றம் செய்கிறன்றனர். அவர்களது கட்டளைக்கு செவிசாய்க்காத மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று பெண்கள் உட்பட 9 பேரின் தலையை துண்டித்து கொலை செய்ததுடன், இறந்தவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர். இத்தகவலை சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் சிரியாவில் உள்ள கோபேன் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.






