
அமெரிக்காவில் வெள்ளைக்கார பெண் ஒருவருக்கு கருப்பின குழந்தை பிறந்ததால் அவர் விந்து வங்கியின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் ஒஹிஹோ (Ohio) மாகாணத்தை சேர்ந்த ஜெனிபர் கிராம்ப்லெட் என்ற பெண் அவரின் பெண் தோழியான அமண்டாவை (Amanda) திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை இருவருக்கும் ஏற்படவே, சிகாகோவில் (Chicago) உள்ள விந்து வங்கி ஒன்றை ஜெனிபர் அணுகியுள்ளார்.
இதன்பின் அங்கிருந்து வெள்ளைக்கார ஆண் ஒருவரின் விந்தணுவை விலைக்கு வாங்கி, செயற்கை கருவூட்டல் முறையில், தன் கருப்பையில் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெனிபருக்கு கருப்பின குழந்தை பிறந்தபோதிலும் அவரும் அமண்டாவும் அக்குழந்தையை அன்பாக அரவணைத்துள்ளனர்.
எனினும் தன்னை ஏமாற்றிய அந்த விந்து வங்கி நிர்வாகிகள் மீது, ஜெனிபர் வழக்கு தொடர்ந்ததுடன் தனக்கு இழப்பீடு வழங்குமாறு கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த மனுவில் கூறியதாவது, நாங்கள் வெள்ளையின பெண்கள். வெள்ளைக்காரர்கள் நிறைந்த பகுதியில் வசிக்கிறோம்.
நாங்கள் கருப்பின பெண்ணை வைத்திருப்பதால், வெள்ளைக்காரர்கள் எங்களை வேற்றுமையாக பார்க்கின்றனர். இதற்கு காரணம் அந்த விந்து வங்கியினர் தான். இவர்கள் இதுபோன்ற தவறை செய்யாமல் இருக்க, அவர்கள் இழப்பீடு தர வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த புதுமையான வழக்கு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.





