வறுமையால் வாடுவோரின் தொகை 13ஆண்டுகளில் பாதியாக குறைந்தது..!

460

கடந்த 13 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கை நிர்ணயிக்க ஒப்புக் கொண்டனர்.

இந்த இலக்கை 2015ஆம் ஆண்டுக்குள் எட்டுவது என முடிவு செய்யப்பட்டது.வறுமை ஒழிப்பு, கல்வி மேம்பாடு, பாலின சமத்துவம், தாய், சேய் நலம், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை, எய்ட்ஸ் மற்றும் மலேரியா கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆயிரமாண்டு இலக்கு தொடர்பாக இந்த ஆண்டுக்கான அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இந்த இலக்குகளில் சில முழுமையாக எட்டப்பட்டுள்ளன. அதை அடைவதற்காக அரசு, சமுதாயம் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் எந்த வகையில் உதவின என்பது குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இன்னமும் எட்டப்படாமல் உள்ள சில இலக்குகளை அடைவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தல் மற்றும் 200 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட சில இலக்கு ஏற்கெனவே எட்டப்பட்டுள்ளன. 2010 நிலவரப்படி70 கோடி பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர். இது 1990இல் இருந்த அளவில் பாதிதான். மலேரியா, காச நோய் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்தல்,எய்ட்ஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் உள்பட சுகாதாரத் துறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டுக்குள் இலக்கை எட்ட முடியும்.

கடந்த 2000 முதல்2010ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோய்க்கு உயிரிழப்போர் எண்ணிக்கை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 1.1லட்சம் பேர் இந்த நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.கடந்த 1995மற்றும்2011க்கு இடைப்பட்ட காலத்தில்5.1 கோடி காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை3.4 கோடியிலிருந்து80 லட்சமாகக் குறைந்துள்ளது. 2000 முதல்2010 வரையிலான காலத்தில் குடிசைகளில் வசிக்கும் 20 கோடி பேர் சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, போதுமான தங்குமிட வசதி பெற்றுள்ளனர். இது 10 கோடி என்ற இலக்கைப்போல 100 சதவீதம் அதிகம் ஆகும்.

தாய்சேய் நலம், அனைவருக்கு கல்வி, கழிப்பிட வசதி மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் இலக்கு எட்டப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பான் கி மூன் கூறுகையில்,ஒரு சில இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை. எனினும், அவை எட்டக்கூடிய தூரத்தில் தான் உள்ளன. இதற்காக