பூமியை விழுங்குமா சூரியப் புயல்?

343

sun

சூரியப் புயல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாக விண்வெளி இயற்பியல் துறை பேராசிரியர் டேனியல் பாக்கர் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் கொலராடோ-பௌல்டர்(Colorado paultar) பல்கலைக்கழக விண்வெளி குழு கூறியதாவது,

சூரியன் எந்த நேரமும் காந்தப் பண்புகள் அடங்கிய மாபெரும் வாயு வெடிப்பை (SOLAR FLARE) வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இத்துடன் சூரிய மண்டலத்தில் ஏற்படும் பெரு வெடிப்பு நிகழ்வான, தீவிர உயர் ஆற்றல் கதிர்வீச்சு வெடிப்பும் (CORONAL MASS EJECTION) சேர்ந்து கொள்ளும் போது, அது சூரியப் புயல் என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் சூரியப் புயலின் போது அதிதீவிர வெப்ப ஆற்றலானது சூரியனின் மேற்பரப்பிலிருந்து விண்வெளியை நோக்கி எறியப்படுகிறது.

மேலும் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் கரும்புள்ளிகளே (SUN SPOT) வாயு வெடிப்புக்கு வழிவகுக்கின்றன.

தற்போது சூரியப் புயல் பூமியின் காந்தப் புலப் பாதையைத் தாக்கினால், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் இதன் மூலம் அமெரிக்காவில் மட்டும் 0.6 முதல் 2.6 டிரில்லியன் டொலர் வரை சேதம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த அக்டோபர் 24ம் திகதி சூரியனில் ஒரு மாபெரும் கரும்புள்ளி தோன்றியதாகும், ஏஆர் 12192 என்ற பெயரிடப்பட்ட அந்தக் கரும்புள்ளியானது பூமியின் விட்டத்தைவிட 10 மடங்கு பெரியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.