செவ்வாயில் பிரம்மாண்ட ஏரி : வெளியான அழகிய புகைப்படங்கள்!!

382

செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்ட ஏரி இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள “கேல் கிரேட்டர்”(Gale Crater) பகுதியில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இங்கு சுமார் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகே விண்கல் ஒன்று மோதியதில் 96 மைல் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான பள்ளம் உருவானதை இந்த விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், 3 மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் (Mount Sharp) என்ற மலையிலிருந்து வரும் நீரானது கேல் பள்ளத்தாக்கின் மையப்பகுதிக்கு வந்து சேர்கிறது.

அந்த மலை அடுக்கடுக்கான படிவப்பாறைகளால் அடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பது, கேல் பள்ளத்தாக்கை நாசாவின் இலக்காக நிர்ணயித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது க்யூரியாசிட்டி விண்கலம் அந்த மலை மீது ஏறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பூமியில் உயிர்கள் வாழ்வது போல் அங்கும் உயிர்கள் வாழமுடியும் என்பதற்கு ஆதாரமாக இதை பார்க்கமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

1 2 3 4