கேலி, கிண்டலை தட்டிக் கேட்ட மாணவியை தீ வைத்து எரித்த இளைஞர்கள்!!

611

fire

வாரணாசியில் கிண்டல் செய்த வாலிபர்களை தட்டிக் கேட்ட 12ம் வகுப்பு மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். வாரணாசியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து, சிக்ரா பொலிஸ் அதிகாரி ராகுல் மிஷ்ரா கூறுகையில்,

லாலாபுரா என்ற இடத்தில் உள்ள மாணவியின் வீட்டில் அவரது தாயை அடித்து தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த மாணவியின் மீது மூன்று வாலிபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்த்த அருகில் உள்ளவர்கள் அந்த மாணவியை கபிசவுராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவியை தீ வைத்து கொளுத்திய மூன்று வாலிபர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார், அவன் பெயர் பப்பு என்றும் இந்த மூன்று வாலிபர்கள் மீதும் ஐ.பி.சி 354 மற்றும் 326 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.