பிழைக்க வந்த குஷ்புவை தமிழகத்தை விட்டே விரட்டி அடிப்போம் : வீரலட்சுமி ஆவேசம்!!

943

kushboo

நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் உருவபொம்மையை எரித்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று நடிகை குஷ்பு கருத்து தெரிவித்ததால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றபடை என்ற அமைப்பு சார்பில் 50 பேர் திரண்டு சென்று பட்டினப்பாக்கத்தில் குஷ்புவின் உருவபொம்மையை எரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் தமிழர் படை தலைவர் வீரலட்சுமி உட்பட 50 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக வீரலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழர்கள் பாதுகாப்புக்காக வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணன் பிரபாகரனையும், அவரது விடுதலைப்புலிகள் அமைப்பையும் யார் இழிவாக பேசினாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

மேலும் பிழைப்புக்காக தமிழ்நாட்டுக்கு வந்த வடமாநில நடிகை குஷ்பு பிழைப்பை மட்டும் பார்த்துக்கொண்டு போகவேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி தவறாக பேசிய குஷ்புவை தமிழகத்தை விட்டே விரட்டி அடிப்போம் என்று கூறியுள்ளார்.