வவுனியாநெற் ஊடக அனுசரணையுடன் கிளிநொச்சியில் வெள்ள நிவாரணபணியில் லண்டன் ஸ்ரீ சோபனா ஜூவலரியின் நடராஜா அறக்கட்டளை நிறுவனத்தினர்!!(படங்கள்,வீடியோ )

569

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கபட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட ஊற்றுபுலம் கிராமமக்களுக்கான உலர் உணவு நிவாரணப்பணியை வெம்பிளி லண்டனில் இயங்கும் ஸ்ரீ சோபனா ஜூவலரியின் ஸ்தாபகர் தனது தந்தையின் பெயரால் நடராஜா அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனமூடாக மேற்கொண்டிருந்தார்.

மேற்படி நிவாரண பணியானது வெள்ளத்தினால் கடுமையாகபாதிக்கபட்ட ஊற்றுபுலம் கிராமத்தை சேர்ந்த முன்னூற்றுமுப்பது (330) குடும்பங்களுக்கு நேற்று (05.01.2015) திங்கட்கிழமை வழங்கி வைக்கபட்டது. அரிசி, பருப்பு, பால்மா, சீனி சக்கரை, டின் மீன் மற்றும் பல உலருணவு பொருட்களை பொதிகளாக்கி கிளிநொச்சி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களிடம் நடராஜா அறக்கட்டளை நிறுவனத்தினர் கையளிக்க அப்பொருட்களை பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி ஊற்றுபுலம் கிராமமக்களுக்கு நேரடியாக சென்று விநியோகித்திருந்தார்.

மேற்படி நிகழ்வு ஊற்று புலம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் ஊற்றுப்புலம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் நந்தா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், நடராஜா அறக்கட்டளையின் சார்பில் உமாதேவன், கஜன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தயாபரன், அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையில் தலைவர் சிறி, ஊற்றுப்புலம் கிராமத்தின் மூத்த பிரஜையும் முன்னாள் கிரா அபிவிருத்தி சங்க தலைவருமான சின்னையா, ஊற்றுப்புலம் பிரதேச கட்சி செயற்பாட்டாளர் வடிவேல்,

பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சர்வானந்தா. மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தை சேர்ந்த வசந்தாதேவி, சுகந்தி உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

மேற்படி வெள்ள நிவாரண பணிக்கு வவுனியா நெற் இணையம் ஊடக அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

1

இதே போன்ற நிவாரண பணிக்களுக்கும் சமூக மற்றும் மக்கள் நலன் பேணும் எந்தவொரு பொதுவான செயல்பாடுகளுக்கும் ஊடக அனுசரணை வழங்க வவுனியா நெற் இணையம் தயாராக உள்ளது என்பதை உதவும் உள்ளம் கொண்ட அன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

1 2 3 4 6 7