6 பேருக்கு வாழ்வு கொடுத்த இரண்டரை வயதுக் குழந்தை!!

558

Bbay

பெங்களூரில் இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 6 பேருக்கு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அமித் உபத்யாய் என்பவரின் இரண்டரை வயது குழந்தை யதார்த் உபத்யாயின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை உதவியுடன் உடல் உறுப்புகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து அந்த குழந்தையின் தந்தை கூறுகையில், உடல் உறுப்புகள் தானம் செய்வதன் மூலம் உயிரிழந்த பின்னும் கூட வாழ்வு கிடைக்கும்.

மரணம் என்பது முற்றுப்புள்ளி அல்ல என்பதை சமுதாயத்துக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றது.

எனது குழந்தை மிகவும் குறைந்த வயதில் உயிரிழந்துள்ளான். அவன் மிகவும் பிரகாசமானவன். அவனது வாழக்கையை வீணாக்கி விடக்கூடாது என்பதற்காகவே உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மற்றொரு படுக்கையில் சிறுநீரக கோளாறால் பதிக்கப்பட்ட 12 வயதான மற்றொரு சிறுவன் இருந்தான். அவனது தந்தை மிகவும் ஏழை.

எனவே அவரால் சிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை. எனவே எனது குழந்தையின் சிறுநீரகம் அந்த சிறுவனுக்கு பொறுத்தப்படுவதால் அவன் உயிர் வாழ வகை செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.