7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 70 வயது முதியவர்!!

533

Abuse

தமிழ்நாடு, சேலம் மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 70 வயது முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள கா.புதூர் கொலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் மாடுகளை வளர்த்து அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமிக்கு இன்று விடுமுறை என்பதால் பள்ளியின் விடுதி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த முதியவர் பெரியசாமி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

தற்செயலாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இந்த சம்பவத்தை பார்த்து விட்டனர். அவர்கள் முதியவர் பெரியசாமியை தப்பவிடாமல் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.