உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் மீது ஏறிய முதல் நபர்!!

303

கனடாவில் பனியால் மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடாவைச் சேர்ந்த வில் காட் என்ற 47 வயதுடைய நபர் வந்துள்ளார்.

கன்மோர் அல்பேர்ட்டாவை சேர்ந்த வில் காட், இந்தவார ஆரம்பத்தில் நயாகரா ஆற்றின் அடித்தளத்தில் ஆரம்பித்து அமெரிக்க எல்லைக்கு அருகில் ஒடும் பாதையான ஹோசூ வீழ்ச்சியின் வடக்கு முனை வழியாக சுமார் ஒரு மணித்தியாலத்தில் விறைப்பான ஏற்றத்தை ஏறி முடித்துள்ளார்.

சவால்கள் நிறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி, ஓவ்வொரு நிமிடமும் மணித்தியாலத்திற்கு 110 கிலோமீற்றர்கள் வேகத்தில் 150 தொன்கள் தண்ணீர் கொட்டும் கம்பீரமான மற்றும் சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளரிடம் இதுபற்றி அவர் கூறுகையில், தனது வாழ்க்கையில் தான் செய்த மிக கடுமையான விடயம் இதுவெனவும் தான் இதுவரை காணாத மிகவும் அழகான விடயம்.

அருவிமீது ஏறியபோது வழியில் தனது பனி கருவிகள் பனியினால் மூடப்பட்டு விட்டதாகவும் தனது கைகளினால் பனியை உருகச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மூடுபனி மற்றும் தெளிப்பான மேகத்தின் உள்ளே ஏறிக்கொண்டிருப்பதாக ஒரு கட்டத்தில் உணர்ந்ததாகவும், நீர்வீழ்ச்சி ஒருமுறை இவரின் தோளின் மேல் விழுந்ததாகவும், அந்த நொடி எவரும் எப்போதும் உணர்ந்திருக்க மாட்டார்கள் என தான் உணர்ந்ததாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

N2 N3 N4 N1