எரிமலை அருகே பறந்த வேற்றுகிரகவாசி!!(வீடியோ)

673

மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை பெண் ஒருவர் படம்பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 மைல் மேற்கே உள்ள கோலிமா என்ற எரிமலை கடந்த வாரம் வெடித்தது.

தற்போதும் புகையை கக்கிக்கொண்டிருக்கும் அந்த எரிமலைக்கு அருகே பறக்கும் குதிரை போன்று தோற்றமளிக்கும் உருவம் ஒன்றை லயோலா (24) என்ற பெண் பார்த்துள்ளார். அப்போது அந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாக தனது கமெராவில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் அதை உற்றுப்பார்த்தபோது குறுகிய மேல்பாகம் பருத்த மத்திய பாகம் கூர்மையான கீழ்பாகம் இருந்ததாகவும் நிச்சயமாக அது பறவை இல்லை என்றும் காரணம் அந்த உருவத்தில் எந்த அசைவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் சில நிமிடங்களில் அது அவரது பார்வையிலிருந்து மறைந்துள்ளதால், அது நிச்சியம் வேற்றுகிரக வாசி தான் என இணையத்தில் வீடியோவை பார்த்தவர்கள் திட்டவட்டமாய் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய வேற்றுகிரக வாசிகளின் ஆர்வலர் கராஸ்கோ, எரிமலை ஏலியன்களை ஈர்க்கக்கூடிய ஒரு இடமாகவே இருக்கிறது என்றும் அவர்கள் நம் கிரகத்திலிருந்து சாம்பிள் எடுத்துச்செல்வதற்காக வந்திருக்கலாம் எனவும் பேசியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் வேற்றுகிரகவாசிகள் குறித்த மர்மமாக இருக்கப்போவதாக கூறப்படுகிறது.

1 2 3