உப்பை உணவாக ஊட்டி 5 வயது மகனைக் கொன்ற தாய் : நெஞ்சை பதறச் செய்யும் ஓர் சம்பவம்!!

342

அமெரிக்காவில் உப்பை ஊட்டி மகனை கொன்ற தாய்க்கு 25 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள கென்டக் நகரில் வசித்து வரும் லேசி பியர்ஸ் (27) என்ற பெண்மணி, தனது 5 வயது மகனை கொல்வதற்கு பல வழிகளை இணையதளத்தில் தேடியுள்ளார். இறுதியில், உணவில் கலக்கும் உப்பை தொடர்ச்சியாக அதிக அளவு கொடுத்து வந்தால் மரணம் ஏற்படும் என்பதை தெரிந்துகொண்டு, தனது மகனுக்கு தினமும் அதிக அளவில் உப்பை கொடுத்து வந்துள்ளார்.

பொலிசிடம் சிக்கக்கூடாது என்பதற்காக, தனது மகனின் உடல்நிலை மோசமாகி வருகிறது என்று, அடிக்கடி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவந்துள்ளார்.

இதற்கிடையில், தனது மகனின் உடல்நிலை மோசமானபோது, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஓவ்வொரு முறை குழந்தையை பரிசோதித்தபோது, உடலில் சோடியத்தின் அளவு கூடிக்கொண்டே சென்றதை கண்டுபிடித்த மருத்துவர்கள் தாயின் மீது சந்தேகப்பட்டனர்.

இந்நிலையில், டுவிட்டரில் ‘எனது செல்ல மகன் இன்று 23 வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துக்கொள்ளுங்கள் என்று பதிவை செய்துவிட்டு மருத்துவமனை சென்றுள்ளார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் சோடியத்தின் அளவு மோசமாக கூடியிருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், குழந்தையின் மூளையில் வீக்கம் ஏற்பட்டதால் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை இறந்தது.

மேலும் மருத்துவ பரிசோதனையில், மகனின் வயிற்றிற்குள் பைப் வழியாக அதிக அளவு உப்பை செலுத்திவிட்டு, அங்கிருந்த அனைத்து தடையங்களையும் அழித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த பெண்ணின் கைப்பேசியை பரிசோதித்ததில், சந்தேகப்பட முடியாத அளவில் கொலை செய்வது எப்படி என இணையதளத்தில் தேடியிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். அந்த பெண்ணிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், தன் மகனை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

நியூயோர்க் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அந்த பெண்ணிற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர், தன் மகனை திட்டம் போட்டு கொன்றுவிட்டு நாடகமாடிய குற்றத்திற்காக அதிகபட்சம் 25 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

M2 M3 M1