கனடாவில் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

808

toronto

கனடாவின் டொரன்டோ நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் மின்சார வசதிகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நூற்றுக்கணக்கானவர்கள் பொலிஸாரின் உதவியுடன் படகுகளில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலையால் டொரன்டோ நகருக்கான சில விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.