இணையத்தை மறப்பதற்காக கையை வெட்டிக் கொண்ட மாணவன்!!

266

Hand

சீனாவில் மாணவர் ஒருவர் இணையத்தை மறக்க வேண்டும் என்பதற்காக தன் கையை வெட்டிக் கொண்டுள்ளனர்.

சீனாவின் ஜீயாங்சூ மாகாணத்தின் நான்டங் நகரைச் சேர்ந்த ஜியா வாங்(19) என்ற மாணவன் 24 மணிநேரமும் இணையத்தில் பொழுதை கழிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

இந்நிலையில் இவரால் இந்த பழக்கத்திலிருந்த மீளமுடியாததால் கை இருந்தால் தானே இணையத்தை பார்க்க முடியும் என எண்ணி தனிமையின் ஓரிடத்திற்கு சென்றுள்ளார்.

இதன்பின் அங்கிருந்த ஒரு கருங்கல் மீது தன் இடதுகை மணிக்கட்டை வைத்து, கத்தியால் ஓங்கி வெட்டி, அதை துண்டித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட பயங்கரமான வலியை தாங்க முடியாத ஜியா வாங், ரத்தம் சொட்டச் சொட்ட டாக்சி ஒன்றை பிடித்து, நான்டங் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்று, அதன் வாசலில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். மேலும் இவர் கண்விழித்த பின் விசாரணை நடத்திய பொலிசார், மணிக்கட்டை தேடி அலைந்து, ஒருவழியாக அதை கண்டுபிடித்து மருத்துவர்களிடம் கொடுத்துள்ளனர்.

சுமார் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை பெற்ற ஜியா வாங்கிற்கு அவரது மணிக்கட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,

அந்த மணிக்கட்டை ஏதாவது நாய் கவ்விச் சென்றிருந்தால் சாத்தியமாகியிருக்காது என்றும் சில நாட்கள் கழித்தே, ஜியா வாங்கின் கைவிரல்கள் பழையபடி இயங்குமா என்பது தெரிய வரும் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் அது இயங்காமல் இருக்க வேண்டும் என மனதை அடக்கத் தெரியாத ஜியா வாங் நினைப்பதாக கூறப்படுகிறது.