வவுனியாவில் சிறையில் இருந்த கைதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி!

1142

Vavuniya

வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவபுரம், பரந்தனைச் சேர்ந்த எஸ்.அருணோதயம் என்ற 32 வயது கைதி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சித்ததாக வவுனியா வைத்தியசாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய உடல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக வைத்தியசாலைக்கு சென்று கைதியை பார்வையிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.